தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை

தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர்
நெல்லையை சேர்ந்தவர் இசக்கிப்பாண்டி (வயது 46). கூலித்தொழிலாளி. இவர் விருதுநகர் வந்தபோது 65 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்ைல கொடுத்தார். இதுகுறித்து விருதுநகர் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து இசக்கிப்பாண்டியை கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகளிர் விரைவு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை நீதிபதி பகவதி அம்மாள் விசாரித்து இசக்கிப்பாண்டிக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





