புகையிலை பொருட்கள் விற்ற 20 பேர் கைது


புகையிலை பொருட்கள் விற்ற 20 பேர் கைது
x

புகையிலை பொருட்கள் விற்ற 20 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தினமும் அந்தந்த பகுதிக்குட்பட்ட போலீஸ் நிலையங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு பெட்டிக்கடை, மளிகை கடை, டீக்கடைகளில் சோதனை நடத்தி வழக்குப்பதிவு செய்கின்றனர். இந்த நிலையில் மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதாக 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 20 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து புகையிலை பொருட்கள் ஏராளமாக பறிமுதல் செய்யப்பட்டன.


Related Tags :
Next Story