டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு கைதானவர் தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வின் கூட்டாளி - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி


டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு கைதானவர் தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வின் கூட்டாளி - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
x
தினத்தந்தி 10 Feb 2020 11:30 PM GMT (Updated: 10 Feb 2020 10:46 PM GMT)

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு கைதானவர் தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வின் கூட்டாளி என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

ஆலந்தூர், 

அமைச்சர் ஜெயக்குமார், சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். முன்னதாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:-

காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதல்-அமைச்சர் அறிவித்து உள்ளார். விவசாயிகள் மட்டுமின்றி, தமிழக மக்கள் அனைவரும் மகிழ்ச்சி கொள்ளும் வகையில் வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். 

இந்த பணிகளை தொடர்ச்சியாக செய்யவே டெல்லிக்கு செல்கிறேன். தொழிற்சாலைகளால் வேலை வாய்ப்பு உருவாகும். மக்கள் பாதிக்காத வகையில் பணிகள் நடக்கும். டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு வழக்கில் அய்யப்பன் என்பவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்து உள்ளனர். காங்கிரசில் இருந்து தி.மு.க. சென்று, தி.மு.க.வின் பிரசார பீரங்கியாக உள்ள முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவரின் கூட்டாளிதான் இந்த அய்யப்பன்.

தி.மு.க. ஆட்சி காலத்தில் விதைக்கப்பட்ட பார்த்தீனிய செடிகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். எதிர்காலத்தில் எந்தவொரு சிறு தவறும் நடக்காத வகையில் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story