போதிய பயணிகள் இல்லாததால் சென்னை விமான நிலையத்தில் 22 விமானங்கள் ரத்து!


போதிய பயணிகள் இல்லாததால் சென்னை விமான நிலையத்தில் 22 விமானங்கள் ரத்து!
x

போதிய விமானிகள் பணிக்கு வராததாலும், போதிய பயணிகள் இல்லாததாலும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னை,

மிக்ஜம் புயல் காரணமாக பலத்த மழை பெய்தது. இதனால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. வானிலை மோசமாக இருந்ததால் தரையிறங்க முடியாத விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டன.

மேலும் அடையாறு ஆற்று வெள்ளநீர் விமான ஓடுபாதையில் தேங்கியது. இதனால் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் நேற்று காலை 9 மணி வரை தற்காலிகமாக மூடப்பட்டது. பின்னர் ஓடுபாதையில் தேங்கிய நீர் வெளியேற்றப்பட்ட பின் 9 மணிக்கு மேல் மீண்டும் விமான போக்குவரத்து தொடங்கப்பட்டது.

இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் 22 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வழக்கமான விமான சேவைகள் தொடங்கியபோதிலும், போதிய விமானிகள் பணிக்கு வராததாலும், போதிய பயணிகள் இல்லாததாலும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 11 விமானங்கள்,11 வருகை விமானங்கள் என மொத்தம் 22 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 10 விமானங்கள் கால தாமதமாக இயக்கப்பட்டன.


Next Story