மேட்டூர் காவிரி ஆற்றின் நடுவே சிக்கிய 3 வாலிபர்கள் பத்திரமாக மீட்பு

மேட்டூர் காவிரி ஆற்றின் நடுவே சிக்கிய 3 வாலிபர்களை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
மேட்டூர் காவிரி ஆற்றின் நடுவே சிக்கிய 3 வாலிபர்கள் பத்திரமாக மீட்பு
Published on

மேட்டூர்,

மேட்டூர் அணை நிரம்பியதை அடுத்து அணைக்கு வரும் நீர் வரத்தைப் பொறுத்து உபரி நீர் திறந்து விட்டப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் அணையின் உபரி நீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக காலை வினாடிக்கு 25000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் திறப்பானது படிப்படியாக அதிகரிக்கப்பட்டு மாலையில் 90 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

இந்த நிலையில் சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே உள்ள மல்லி குட்டை பகுதியை சேர்ந்த ரவி, பிரபு, தினேஷ் ஆகிய மூன்று பேரும் 16 கண் பாலத்தில் இருந்து தண்ணீர் வெளியேறும் காவிரி ஆற்றின் பாதையில் மேட்டூர் அணல் மின் நிலையம் அருகே தண்ணீர் வெளியேறும் பாதையில் ஒரு பாறையின் மீது நின்று தண்ணீர் வழிந்து ஓடும் காட்சியை ரசித்து ரசித்து வந்தனர்.

இந்த நிலையில் 16 மதகுகள் வழியாக திறக்கப்படும் தண்ணீரின் அளவு திடீரென அதிகரிக்கப்பட்டதால் அவர்களால் உடனடியாக அந்த பாறையில் இருந்து தண்ணீரைக் கடந்து கரையேற முடியாமல் தவித்தார்கள். உடனடியாக அவர்கள் கூக்குரல் கேட்ட அங்கு இருந்த பொதுமக்கள் மேட்டூர் கருமலைக்குடல் போலீசார் மற்றும் மேட்டூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

மேட்டூர் தீயணைப்பு துறை விரர்களும், கருமலைக்குடல் போலீசாரும் விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி மூன்று பேரையும் பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதன் காரணமாக மேட்டூர் அனல் மின் நிலைய சாலை சுமார் ஒரு மணி நேரம் மக்கள் கூட்டமாக காட்சியளித்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com