திருட்டு போன ரூ.10½ லட்சம் மதிப்புள்ள 70 ஆண்ட்ராய்டு செல்போன்கள்


திருட்டு போன ரூ.10½ லட்சம் மதிப்புள்ள 70 ஆண்ட்ராய்டு செல்போன்கள்
x

திருட்டு போன ரூ.10½ லட்சம் மதிப்புள்ள 70 ஆண்ட்ராய்டு செல்போன்கள்

திருவாரூர்

திருவாரூர் மாவட்டத்தில் திருட்டு போன ரூ.10½ லட்சம் மதிப்புள்ள 70 ஆண்ட்ராய்டு செல்போன்களை உரிமையாளர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் ஒப்படைத்தார்.

தேடுதல் வேட்டை

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் கடந்த 2020, 2022 மற்றும் 2023-ம் ஆண்டுகளில் செல்போன்கள் காணாமல் போனதாக பெறப்பட்ட புகார்கள் மற்றும் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் பெறப்பட்ட புகார் மனுக்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் தீவிர விசாரணையின் மூலம் தேடுதல் வேட்டை நடைபெற்று வந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இயங்கி வரும் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தின் மூலம் இந்த விசாரணை செய்யப்பட்டு வந்தது. தற்போது திருவாரூர் மாவட்டத்தில் திருட்டு போன செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளன.

70 ஆண்ட்ராய்டு செல்போன்கள் ஒப்படைப்பு

அதன்படி திருட்டு போன ரூ.10 லட்சத்து 53 ஆயிரத்து 500 மதிப்புள்ள 70 ஆண்ட்ராய்டு செல்போன்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் செல்போன் காணாமல் போனதாகவும், திருட்டு போனதகாவும் புகார் கொடுத்தவர்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் செல்போன்களை ஒப்படைத்தார். இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டிடம் இருந்து உரிமையாளர்கள் தங்களது செல்போன்களை பெற்றுக்கொண்டனர்.

கவனமாக வைத்து கொள்ள வேண்டும்

பின்னர் போலீஸ் சூப்பிரண்டு கூறுகையில்,

பொதுமக்கள் ஆண்ட்ராய்டு செல்போன்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். பயணத்தின் போது கவனமாக செல்போன்களை பாதுகாத்து கொள்ள வேண்டும். ஆண்ட்ராய்டு செல்போன் காணாமல் போனது தொடர்பான அனைத்து புகார்களையும் விரைந்து விசாரித்து செல்போன்களை மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட சைபர் கிரைம் போலீசாருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என்றார்.


Next Story