கோத்தகிரியில் சாலையில் உலா வந்த கரடி
கோத்தகிரியில் சாலையில் உலா வந்த கரடி
கோத்தகிரி
கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரடிகளின் நடமாட்டம் வெகுவாக அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் நேற்று முன் தினம் மாலை கோத்தகிரி கார்சிலியிலிருந்து செல்வபுரம் மற்றும் தனியார் மேல்நிலைப் பள்ளிக்கு செல்லும் குறுகிய சாலையின் நடுவே கரடி ஒன்று உலா வந்த வண்ணம் இருந்ததைக் கண்ட வாகன ஓட்டிகள் அச்சமடைந்து சற்று தொலைவிலேயே தங்களது வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்தினர். சற்று நேரம் சாலையிலேயே உலா வந்த கரடி பின்னர் அருகிலிருந்த தேயிலைத் தோட்டதிற்குள் சென்று மறைந்தது. அதற்கு பின்னரே வாகன ஓட்டிகள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.மேலும் இது குறித்து வாகன ஓட்டிகள் தெரிவிக்கையில், கோத்தகிரி சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து கரடிகளின் நடமாட்டம் இருந்து வருகிறது. எனவே அவை பொதுமக்களை தாக்கும் அபாயம் உள்ளதால், இவ்வாறு சுற்றித்திரியும் கரடிகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். ஏற்கனவே இதே கார்சிலி பகுதியில் கடந்த வாரம் சிறுத்தை, கறுஞ் சிறுத்தை மற்றும் கரடி உலா வந்த காட்சிகள் அங்குள்ள தனியார் தொழிற்கூடத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்தது குறிப்பித்தக்கது.