மொட்டை மாடியில் நின்றபடி தென்னை ஓலையை இழுத்த பெண் தவறி விழுந்து சாவு

மொட்டை மாடியில் நின்றபடி தென்னை ஓலையை இழுத்த பெண் தவறி விழுந்து சாவு

ஆவடியில் மொட்டை மாடியில் நின்றபடி தென்னை ஓலையை இழுத்த பெண் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
Published on

ஆவடி காமராஜ் நகர் முத்துக்குமரன் தெருவை சேர்ந்தவர் ஆனந்தன். இவருடைய மனைவி புவனேஸ்வரி (வயது 35). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு புவனேஸ்வரி, காற்று வாங்குவதற்காக வீட்டின் மொட்டை மாடிக்கு சென்றார்.

வீட்டின் அருகே உள்ள தென்னை மரத்தில் காய்ந்த ஒலை ஒன்று இவரது மொட்டை மாடியின் நடுபகுதி வரை தொங்கியபடி இருந்தது. அதனை அகற்ற நினைத்த புவனேஸ்வரி, மாடியில் நின்றபடி தென்னை மர ஓலையை பிடித்து இழுத்தார்.

அப்போது ஓலை மரத்திலிருந்து பிய்த்துக் கொண்டு கையோடு வந்ததால் புவனேஸ்வரி நிலைதடுமாறி மொட்டை மாடியில் கீழே தவறி விழுந்தார். இதில் தலையில் படுகாயம் அடைந்த புவனேஸ்வரியை ஆவடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், புவனேஸ்வரி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com