லாரி சக்கரத்தில் சிக்கி தனியார் நிறுவன ஊழியர் பலி

மோட்டார் சைக்கிளில் சென்ற தனியார் நிறுவன ஊழியர் லாரி சக்கரத்தில் சிக்கி பலியானார்.
லாரி சக்கரத்தில் சிக்கி தனியார் நிறுவன ஊழியர் பலி
Published on

திருவள்ளூர் மாவட்டம் மாதர்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பானுபிரகாஷ் (வயது 38). இவர் ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் பானுபிரகாஷ் வழக்கம் போல வேலையை முடித்துவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது மணவாளநகர் சந்திப்பு பகுதியிலிருந்து ரெயில்வே ஸ்டேஷன் அருகே வரும்போது முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்ற போது லாரி நிலைதடுமாறி பானுபிரகாஷ் கீழே விழுந்தார். இதில் லாரி சக்கரம் அவர் தலையில் ஏறி இறங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்த மணவாளநகர் போலீசார் பானுபிரகாஷ் உடலைக் கைப்பற்றி திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com