மனைவி கோபித்து வீட்டை விட்டுச் சென்றதால்1½ வயது குழந்தைக்கு பாலில் விஷம் கலந்து கொடுத்து தொழிலாளி தற்கொலை முயற்சி

மனைவி கோபித்து வீட்டை விட்டுச்சென்றதால் 1½ வயது குழந்தைக்கு பாலில் விஷம் கலந்து கொடுத்துவிட்டு, தொழிலாளி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
மனைவி கோபித்து வீட்டை விட்டுச் சென்றதால்1½ வயது குழந்தைக்கு பாலில் விஷம் கலந்து கொடுத்து தொழிலாளி தற்கொலை முயற்சி
Published on

உசிலம்பட்டி, 

மனைவி கோபித்து வீட்டை விட்டுச்சென்றதால் 1 வயது குழந்தைக்கு பாலில் விஷம் கலந்து கொடுத்துவிட்டு, தொழிலாளி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

குழந்தைக்கு விஷம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள வாடிக்கோவில்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அருண்(வயது 28). கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி ஜீவிதா. இவர்களுக்கு 1 வயதில் ஆண் குழந்தை உள்ளது. கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

நேற்றும் தகராறு ஏற்பட்டது. இதனால் மனைவி ஜீவிதா கோபித்துக்கொண்டு, குழந்தையை விட்டுவிட்டு தனது தாயார் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

மனைவி வீட்டை விட்டுச்சென்றதால் மனவருத்தத்தில் இருந்த அருண், தனது குழந்தைக்கு பாலில் விஷம் கலந்து கொடுத்துள்ளார். பின்னர் அவரும் விஷம் குடித்தார்.

தீவிர சிகிச்சை

இதையடுத்து மயங்கி உயிருக்கு போராடிய 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததால் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து உசிலம்பட்டி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com