நடைப்பயிற்சி சென்ற சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரிடம் சங்கிலி பறிப்பு


நடைப்பயிற்சி சென்ற சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரிடம் சங்கிலி பறிப்பு
x

சென்னை திரு.வி.க.நகரில் நடைப்பயிற்சி சென்ற சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரிடம் சங்கிலி பறிப்பில் ஈடுப்பட்ட 2 மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

சென்னை

சென்னை திரு.வி.க.நகர், கோபாலபுரம் முதல் தெருவை சேர்ந்தவர் அசோகன் (வயது 62). சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக வேலை செய்து ஓய்வுபெற்ற இவர், நேற்று காலை நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது குமரன் நகர் 4-வது தெரு சந்திப்பு அருகே வந்தபோது, அவரை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த 2 பேர் அசோகன் கழுத்தில் இருந்த 3 பவுன் சங்கிலியை கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர். இதுகுறித்து அசோகன் கொடுத்த புகாரின்பேரில், திரு.வி.க.நகர் போலீசார் வழிப்பறி திருடர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.


Next Story