துறையூர் ஓங்காரக் குடில் குருநாதர் மறைவு - எடப்பாடி பழனிசாமி இரங்கல்

தவத்திரு ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகளை இழந்து வாடும் அவரது ஆன்மிக பக்தர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

சென்னை,

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:-

பலகோடி மக்களின் பசிப் பிணி ஆற்றி உலகெங்கும் சன்மார்க்கத்தைப் பரப்பி, அன்பையும், அறனையும், தவத்தையும் வளர்த்திட்ட துறையூர் ஓங்காரக் குடில் குருநாதர் தவத்திரு ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள் இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.

துறையூரை தலைமையிடமாகக் கொண்டு ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கத்தின் மூலம் கடந்த 48 ஆண்டுகளாக ஆன்மிகத் தொண்டில் ஈடுபட்டிருந்த தவத்திரு ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகளை இழந்து வாடும் அவரது ஆன்மிக பக்தர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடியில் முக்திபெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com