தீபாவளி தொடர் விடுமுறை: இன்று முதல் சனிக்கிழமை வரை கூடுதல் மெட்ரோ ரெயில் சேவை


தீபாவளி தொடர் விடுமுறை: இன்று முதல் சனிக்கிழமை வரை கூடுதல் மெட்ரோ ரெயில் சேவை
x

கோப்புப்படம்

போக்குவரத்து நெரிசல் இல்லாத பயணத்தை மேற்கொள்ள பயணிகள் மெட்ரோ ரெயில் சேவையை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது

சென்னை,

தீபாவளி தொடர் விடுமுறையை முன்னிட்டு மெட்ரோ ரெயில் பயணிகளின் வசதிக்காக மாலை நெரிசல்மிகு நேரத்தில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரெயில் சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தீபாவளி தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்லும் மெட்ரோ ரெயில் பயணிகளின் வசதிக்காக மாலை நெரிசல்மிகு நேரத்தில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரெயில் சேவை, இன்று (9-ந் தேதி), நாளை (10-ந் தேதி) மற்றும் நாளை மறுநாள் (11-ந் தேதி) ஆகிய நாட்களில் இரவு 10:00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நீட்டிக்கப்பட்ட நெரிசல்மிகு நேரங்களில், இரவு 8:00 மணி முதல் 10:00 மணி வரை மெட்ரோ ரெயில் சேவைகள் இரண்டு வழித்தடங்களிலும் 9 நிமிட இடைவெளிக்கு பதிலாக 6 நிமிட இடைவெளியிலும் இயக்கப்படும். போக்குவரத்து நெரிசல் மற்றும் சிரமம் இல்லாத பயணத்தை மேற்கொள்ள பயணிகள் மெட்ரோ ரெயில் சேவையை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த மெட்ரோ ரெயில் சேவை நீட்டிப்பு இன்று (வியாழக்கிழமை), 10.11.2023 (வெள்ளிக்கிழமை) மற்றும் 11.11.2023 (சனிக்கிழமை) ஆகிய மூன்று நாட்களுக்கு மட்டுமே" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story