மின்சார ரெயில்கள் ரத்து: தாம்பரம் பேருந்து நிலையத்தில் அலைமோதும் மக்கள் கூட்டம்

பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் மின்சார ரெயில் சேவை ரத்துசெய்யப்பட்டுள்ளது.
மின்சார ரெயில்கள் ரத்து: தாம்பரம் பேருந்து நிலையத்தில் அலைமோதும் மக்கள் கூட்டம்
Published on

சென்னை,

சென்னை எழும்பூர் - விழுப்புரம் ரெயில்வே வழித்தடத்தில் கோடம்பாக்கம் - தாம்பரம் இடையே தண்டவாள பராமரிப்பு பணி இன்று காலை 11 மணி முதல் மதியம் 3.15 மணி வரை நடைபெறுகிறது. இதையொட்டி சென்னை கடற்கரை - தாம்பரம், கடற்கரை - செங்கல்பட்டு, தாம்பரம் - கடற்கரை, செங்கல்பட்டு - கடற்கரை, காஞ்சீபுரம் - கடற்கரை, திருமால்பூர் - கடற்கரை இடையே இயக்கப்படும் 44 மின்சார ரெயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

மின்சார ரெயில்கள் ரத்துசெய்யப்பட்டதன் காரணமாக மக்கள் பேருந்து போக்குவரத்தை அதிக அளவில் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக தாம்பரம் ரெயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகரித்து காணப்படுகிறது. தாம்பரம் மட்டுமன்றி பிற பேருந்து நிலையங்களிலும் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.

பயணிகளின் வசதிக்காக தாம்பரம் - கடற்கரை வழித்தடத்தில் மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் 150 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com