குற்றால அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு


குற்றால அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு
x

ஐந்தருவியை தொடர்ந்து மெயின் அருவியிலும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

தென்காசி,

மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள குற்றால அருவிகளில் கடந்த 31-ந்தேதி சீசன் தொடங்கியது. மழை இல்லாத காரணத்தால் கடந்த 10 நாட்களாக அருவிக்கு வரும் நீர்வரத்து குறைந்து காணப்பட்டது. எனினும், சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகை தந்து ஆரவாரத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.

இந்த நிலையில், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த மழை காரணமாக குற்றாலம் ஐந்தருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனை தொடர்ந்து மெயின் அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளப்பெருக்கின் போது மண், குச்சிகள் அடித்துவரப்பட்டது.

அப்போது புதிதாக பொருத்தப்பட்ட பாதுகாப்பு அலாரம் ஒலித்ததை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து, பாதுகாப்பு கருதி சுற்றுலாப்பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டது.


Next Story