செல்போன்கள், மடிக்கணினி திருடியதாக சிறுவன் உள்பட 4 பேர் கைது


செல்போன்கள், மடிக்கணினி திருடியதாக சிறுவன் உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 29 April 2023 12:15 AM IST (Updated: 29 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

செல்போன்கள், மடிக்கணினி திருடியதாக சிறுவன் உள்பட 4 பேர் கைது

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி மகாலிங்கபுரம் போலீஸ் நிலையம் அருகில் அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவர் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் விடுதியில் இருந்த மாணவர்களின் செல்போன்கள், மடிக்கணினி ஆகியவை திருடுபோனது. மேலும் விடுதியில் சக மாணவர்களிடம் விசாரித்தும், செல்போன் கிடைக்கவில்லை. இதையடுத்து கோவை காரமடையை சேர்ந்த வார்டன் முத்துராஜ் என்பவர் மகாலிங்கபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில் சந்தேகத்தின் பேரில் குமரன் நகரை சேர்ந்த 18 வயது சிறுவனை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் விடுதி மாணவர்களின் செல்போன், மடிக்கணியை திருடி சென்றது தெரியவந்தது. மேலும் இதில் தொடர்புடைய பத்ரகாளியம்மன் கோவில் வீதியை சேர்ந்த முகமது சுலைமான் (21), மாக்கினாம்பட்டியை சேர்ந்த அருண்பாண்டியன் (19), ஊட்டி பந்தலூரை சேர்ந்த தீப தேவதர்ஷன் (26) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் கைதானவர்களிடம் இருந்து செல்போன்கள், மடிக்கணினி பறிமுதல் செய்யப்பட்டது.

1 More update

Next Story