தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்தது...!


தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்தது...!
x

தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ.120 குறைந்துள்ளது.

சென்னை,

தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக இருந்து வருகிறது. இந்நிலையில், தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது.

அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 44,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் ரூ.5,555-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதைபோல ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.78-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 78,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Next Story