மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. சவரனுக்கு இன்று ரூ.304 அதிகரிப்பு.!

தங்கத்தை போலவே வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது.
சென்னை,
ஆபரண தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் வார இறுதி நாளான இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 உயர்ந்தது. நேற்று மாலை ஒரு கிராம் ரூ.5,457 ஆகவும், சவரன் ரூ.43,656 ஆகவும் இருந்தது.
இன்று காலை கிராமுக்கு ரூ.38 அதிகரித்து ரூ.5,495-க்கு விற்பனையானது. சவரனுக்கு ரூ.304 அதிகரித்து ரூ.43,960 ஆக இருந்தது. இதேபோல வெள்ளியின் விலையிலும் உயர்வு காணப்பட்டது. கிராமுக்கு ரூ.1 அதிகரித்தது. இன்று காலை வெள்ளி விலை கிராம் ரூ.76.70 ஆகவும், ஒரு கிலோ 76,700 ஆகவும் இருந்தது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





