தமிழகத்தின் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்துவரும் நாட்களில் வெப்பநிலையும் உயரக்கூடும் என ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
தமிழகத்தின் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
Published on

சென்னை,

தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழ்நாட்டில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்றும் (புதன்கிழமை), நாளையும் (வியாழக்கிழமை) மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதன்படி, தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டத்தின் மலைப் பகுதிகள், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

அதன் தொடர்ச்சியாக நாளை தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் காற்றுடன் மிதமான மழையும், நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக் கூடும். மழை ஒரு பக்கம் என்றால், அடுத்துவரும் நாட்களில் வெப்பநிலையும் உயரக்கூடும் என ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com