கோவையில் எந்த வேட்பாளருடனும் எனக்கு போட்டி கிடையாது; அண்ணாமலை

கோவை வேட்பாளர்களுடன் சண்டை போட நான் வரவில்லை என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பேசினார்.
கோவையில் எந்த வேட்பாளருடனும் எனக்கு போட்டி கிடையாது; அண்ணாமலை
Published on

கோவை,

கோவை நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜ.க சார்பில் அக்கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். நேற்று முதல் அண்ணாமலை கோவை தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அண்ணாமலைக்கு எதிராக தி.மு.கவில் கணபதி ப.ராஜ்குமார், அ.தி.மு.க.வில் சிங்கை ராமச்சந்திரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

தேர்தல் பிரசாரத்திற்கு இடையே அண்ணாமலை இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மற்ற கட்சி வேட்பாளர்கள் என்னை என்ன வேண்டுமானலும் சொல்லலாம்; கோவை வேட்பாளர்களுடன் சண்டை போட நான் வரவில்லை;என்னுடைய வேலை மக்களிடம் பிரச்னைகளை எடுத்துக் கூறி வாக்கு சேகரிப்பது"என்றார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com