சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைவு

வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது.
சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைவு
Published on

சென்னை,

தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக மக்களுக்கு கண்ணாமூச்சி காட்டி வருகிறது. இந்நிலையில், தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது.

அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.44,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒருகிராம் தங்கத்தின் விலை ரூ.25 குறைந்து ரூ.5,505க்கு விற்கப்பட்டு வருகிறது.

அதேபோல, வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. ஒருகிராம் வெள்ளி 50 காசுகள் குறைந்து ரூ.76.20க்கும், ஒருகிலோ வெள்ளி 500 ரூபாய் குறைந்து ரூ.76,200க்கும் விற்கப்படுகிறது.  

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com