சென்னையில் ஆபரணத்தங்கம் விலை இன்றும் சரிவு

22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்துள்ளது.
சென்னையில் ஆபரணத்தங்கம் விலை இன்றும் சரிவு
Published on

சென்னை,

தங்கத்தின் விலை கடந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்தோடு காணப்படுகிறது.நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்த நிலையில், நேற்று ரூ.480 குறைந்தது.

இந்த நிலையில், சென்னையில் தங்கம் விலை இன்று மீண்டும் குறைந்துள்ளது. அதன்படி , 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,740-க்கும், சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.45,920-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.76-க்கும் ஒரு கிலோ ரூ.76,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com