வீர விளையாட்டான ஜல்லிக்கட்டைப் போற்றுவோம், பாதுகாப்போம்- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
வீர விளையாட்டான ஜல்லிக்கட்டைப் போற்றுவோம், பாதுகாப்போம்- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
Published on

மதுரை,

மதுரையில் உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்து போட்டியை கண்டுகளித்தார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

"சங்க காலம் முதல் இந்தக் காலம் வரை ஏறுதழுவுதல் நம் பண்பாட்டின் அடையாளமாகத் திகழ்கிறது. அந்த வகையில், உலகப்புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை உறுதிமொழி வாசித்து கொடியசைத்து தொடங்கி வைத்தோம்.

வாடிவாசலில் இருந்து துள்ளிக்கொண்டு சீறிப்பாயும் காளைகள் - தீரமிகு வீரர்கள் என ஆர்ப்பரித்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நமக்கு உற்சாகத்தையும் - மகிழ்ச்சியையும் தந்தது.

போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கும் - காளைகளுக்கும் தங்கக்காசு - தங்க மோதிரம் உள்ளிட்ட பரிசுப் பொருட்களை வழங்கி வாழ்த்தினோம்.

அரசு வகுத்த அத்தனை விதிமுறைகளையும் முறையாக பின்பற்றி ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்தி வரும் ஏற்பாட்டாளர்கள் அனைவருக்கும் பாராட்டுகள். நம் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டைப் போற்றுவோம் - பாதுகாப்போம்." என அதில் அவர் தெரிவித்துள்ளார்.  

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com