கோயம்பேடு பஸ் நிலையத்தில் அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி ஆண் சாவு

கோயம்பேடு பஸ் நிலையத்தில் அரசு பஸ் அடியில் ஒருவர் படுத்திருப்பது தெரியாமல் டிரைவர் பஸ்சை இயக்கியதால் பஸ் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
கோயம்பேடு பஸ் நிலையத்தில் அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி ஆண் சாவு
Published on

சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து வெளியூர் செல்லும் அரசு பஸ் நிறுத்தத்தில் நேற்று அதிகாலை திருச்சி செல்லும் அரசு பஸ்சை டிரைவர் எடுத்தார். அப்போது பஸ்சுக்கு அடியில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் படுத்திருப்பது தெரியாமல் பஸ்சை டிரைவர் எடுத்ததால், அவர் மீது பஸ் சக்கரம் ஏறி இறங்கியது. பஸ் சக்கரத்தில் சிக்கிய அவர், உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பலியானவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பலியான அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com