அவதூறு பதிவிட்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர் கைது


அவதூறு பதிவிட்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர் கைது
x

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி குறித்து வலைதளத்தில் அவதூறு பதிவிட்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.

புதுக்கோட்டை

வடகாடு அருகே மேலாத்தூரை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் கணேஷ்குமார் (வயது 37). நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இவர், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியை அவதூறாக விமர்சித்து சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். இதுகுறித்து கணேஷ் குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தி.மு.க.வினர் புகார் அளித்தனர். அதன்பேரில் வடகாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த கணேஷ்குமாரை நேற்று கைது செய்தனர்.


Related Tags :
Next Story