காலி சிலிண்டரை மாற்ற உதவிக்கு வந்த பக்கத்து வீட்டுக்காரர் பலி..! நீலகிரியில் அதிர்ச்சி

காலி சிலிண்டரை மாற்ற உதவிக்கு வந்த பக்கத்து வீட்டுக்காரர் பலி..! நீலகிரியில் அதிர்ச்சி

நீலகிரியில் காலி சிலிண்டரை மாற்ற உதவிக்கு வந்த பக்கத்து வீட்டுக்காரர், எரிவாயு கசிந்து தீ விபத்து காரணமாக உயிரிழந்தார்.
Published on

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள ஜெகதலா கிரமத்தை சேர்ந்தவர் கோபால். இவர் வங்கி பாதுகாவலராக பணியாற்றி வருகிறார். இன்று அவரது வீட்டில் கியாஸ் சிலிண்டர் தீர்ந்துள்ளது.

சிலிண்டரை மாற்றுவதற்காக வீட்டின் அருகே வசிக்கும் நடராஜன் என்பவரை உதவிக்கு அழைத்துள்ளார். அதன் பேரில் வந்த நடராஜன், சிலிண்டரை மாற்றும்போது, கசிவு ஏற்பட்டு கியாஸ் பரவி தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

கியாஸ் சிலிண்டர் கசிவு காரணமாக சிலிண்டரை மாற்ற வந்த நடராஜ் மற்றும் வீட்டு உரிமையாளரான கோபாலின் மனைவி இருவரும் மயக்கமடைந்து வீட்டிலேயே விழுந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவத்தை அறிந்த தீயணைப்பு துறையினர், மயக்கமடைந்த இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதில் நடராஜன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றொருவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com