தங்கும் விடுதிகளில் விபசாரம்; 19 பேர் கைது


தங்கும் விடுதிகளில் விபசாரம்; 19 பேர் கைது
x

தங்கும் விடுதிகளில் விபசாரத்தில் ஈடுபட்ட 19 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி

சமயபுரம்:

விபசாரம்

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் ஆசை வார்த்தை கூறி விபசாரம் நடப்பதாக திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்படி தனிப்படை போலீசார் நேற்று சமயபுரத்தில் உள்ள தங்கும் விடுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது 4 தங்கும் விடுதிகளில் வெளியூரில் இருந்து பெண்களை வரவழைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து தங்கும் விடுதி உரிமையாளர் ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள நடுநிராவி பகுதியை சேர்ந்த சக்திவேல் (வயது 67), புதுக்கோட்டை அருகே உள்ள கீழையூர் குடித்தெருவை சேர்ந்த சுதந்திரம் (49), அரியலூர் மாவட்டம், பெரிய பட்டக்காடு வடக்கு தெருவை சேர்ந்த பிரபாகரன் (33), திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்த சச்சின் என்ற தென்றல்அரசன் (24), மயிலாடுதுறை அருகே உள்ள ராதாநல்லூரை சேர்ந்த சிவராஜ் (33) ஆகியோரை கைது செய்தனர்.

19 பேர் கைது

மேலும் பெரம்பலூர் அருகே உள்ள பெரலி பகுதியை சேர்ந்த வேம்பு(38), ஈரோடு அருகே உள்ள பெரிய செம்பூர் தண்ணீர்பந்தல் பாளையம் பகுதியை சேர்ந்த நமச்சிவாயம்(51), சமயபுரம் அருகே உள்ள மாகாளிகுடியை சேர்ந்த சீனிவாசன்(39), திருச்சி பொன்னேரிபுரம் முல்லை நகரை சேர்ந்த தமிழரசன் (39), ஸ்ரீரங்கம் முல்லையப்பா நகரைச் சேர்ந்த செல்வம் (38), சமயபுரம் சக்திநகரை சேர்ந்த கார்த்தி (38), தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த முனியசாமி (51) ஆகியோர் உள்பட மொத்தம் 19 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

பின்னர் தனிப்படை போலீசார் அவர்களை சமயபுரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதுபோன்று வெளியூர்களில் இருந்து பெண்களை அழைத்து வந்து விபசாரத்தில் ஈடுபடுத்தும் தங்கும் விடுதிகள், அதன் உரிமையாளர்கள், நிர்வாகிகளை பற்றி விவரங்களை சேகரித்து வரும் போலீசார், அவர்களை ரகசியமாக கண்காணித்து வருகின்றனர். இந்த சம்பவம் நேற்று சமயபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

1 More update

Next Story