வள்ளலார் சர்வதேச மையத்தை அமைக்க எதிர்ப்பு: பாமக போராட்டம்- போலீஸ் குவிப்பு


வள்ளலார் சர்வதேச மையத்தை அமைக்க எதிர்ப்பு: பாமக போராட்டம்- போலீஸ் குவிப்பு
x
தினத்தந்தி 17 Feb 2024 6:02 AM GMT (Updated: 17 Feb 2024 10:44 AM GMT)

பா.ம.க. போராட்டம் அறிவிப்பை தொடர்ந்து, வடலூரில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

வடலூர்,

வடலூர் சத்திய ஞானசபையின் பெருவெளியில் ரூ 91 கோடியில்,வள்ளலார் சர்வதேச மையத்தை அமைக்க தமிழக அரசு திட்டமிடப்பட்டது. இதற்கு வள்ளலார் பக்தர்களும், சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். பன்னாட்டு ஆய்வு மையத்தை பக்தர்கள் கூடும் பெருவெளிக்கு பதில் வடலூரில் வேறு பகுதியில் அமைத்திட வேண்டும் என்பது பக்தர்கள் கோரிக்கையாக உள்ளது.

இந்த நிலையில், வள்ளலார் பன்னாட்டு மையத்திற்கு இன்று அடிக்கல் நாட்டுவதற்கு தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக வெளியானது. அடிக்கல் நாட்டு விழாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.க.வினர், வடலூர் பஸ் நிலையம் எதிரில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பா.ம.க.வினர் மட்டுமின்றி சன்மார்க்க சங்கத்தினர் உட்பட ஆயிரக்கணக்கானவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர், இதையொட்டி அங்கு 1500-க்கு மேலான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர், தயார் நிலையில் வஜ்ரா வாகனம் நிறுத்தப்பட்டு இருந்தது. இந்த போராட்டத்தால் வடலூரில் பரபரப்பும் நிலவியது.


Next Story