விநாயகர் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்

விநாயகர் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
விநாயகர் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்
Published on

சதுர்த்தியை முன்னிட்டு புன்னைவனூர் புன்னைவன நாயகி கோவிலில் உள்ள விநாயகருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டதுஇதேபோல் முத்தனூர், சேமங்கி, மரவாபாளையம், நொய்யல், குறுக்குச்சாலை அண்ணாநகர், அத்திப்பாளையம், குப்பம், புன்னம் சத்திரம், மூலிமங்கலம், கரைப்பாளையம், நடையனூர், தவுட்டுப்பாளையம், நஞ்சை புகழூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்களிலும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.

வேலாயுதம்பாளையம் கடைவீதியில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் வளர்பிறை சதுர்த்தியையொட்டி விநாயகருக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், விபூதி உள்பட 16 வகையான வாசனை திரவியங்களுடன் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமி மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. காகிதபுரம், புகழிமலை, ஓம் சக்தி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com