ஒரே நாளில் 2 அய்யனார் கோவில்களில் குடமுழுக்கு
ஒரே நாளில் 2 அய்யனார் கோவில்களில் குடமுழுக்கு நடந்தது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே அண்டர்காடு பகுதியில் உள்ள பிச்சுக்கொடை அய்யனார் கோவில் புனரமைக்கப்பட்டு கடந்த 4-ந் தேதி கணபதி பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின. நேற்று 4-ம் கால யாகசாலை பூஜைகள் முடித்த பின்னர் சிவாச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய கடங்களை யாக சாலையில் இருந்து எடுத்து சென்று கோவில் விமான கலசத்தில் ஊற்றி, குடமுழுக்கை நடத்தி வைத்தனர். அப்போது ரெங்கமாறன் சாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் குடமுழுக்கு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் திருக்குவளை அருகே திருக்குண்டையூர் ஏரித்திடல் கிராமத்தில் பழமை வாய்ந்த பூமாலை கூத்த அய்யனார், மண்வெட்டி பெத்தான் கோவில் உள்ளது. இக்கோவிலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முன்தினம் குடமுழுக்கு நேற்று நடந்தது. இதை முன்னிட்டு நேற்று முன்தினம் முதல் கால யாகசாலை பூஜை நடந்தது. நேற்று 2-ம் கால யாக சாலை பூஜைக்கு பின்னர் கோவில் விமான கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டது. இதில சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.