சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சற்று அதிகரிப்பு.!

சென்னையில் தங்கத்தின் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது.
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சற்று அதிகரிப்பு.!
Published on

சென்னை,

தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக மக்களுக்கு கண்ணாமூச்சு காட்டி வருகிறது. இந்த நிலையில், சென்னையில் தங்கத்தின் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது.

அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ.80 அதிகரித்து ரூ.43,520க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் கிராமுக்கு ரூ.10 அதிகரித்து 5,440-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதேபோல வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலை கிராமுக்கு 90 காசுகள் உயர்ந்து 75.70க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com