மறியலில் ஈடுபட்ட மாதர் சங்கத்தினர் கைது
மறியலில் ஈடுபட்ட மாதர் சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை
இந்திய மல்யுத்த விளையாட்டு வீராங்கனைகள் மீது பாலியல் வன்முறையில் ஈடுபட்ட பா.ஜ.க. எம்.பி.யை பதவி நீக்கம் செய்ய கோரி புதுக்கோட்டையில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், இந்திய மாதர் தேசிய சம்மேளனம் இணைந்து தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு தேசியக்குழு உறுப்பினர் பவிதாரணி தலைமை தாங்கினார். மாதர் சங்க நிர்வாகி இந்திராணி உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் கோரிக்கை தொடர்பாக கோஷங்களை எழுப்பினர். இதில் 23 பெண்கள் உள்பட 25 பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story