வேன் டிரைவர் திடீர் சாவு

வத்தலக்குண்டு அருகே வேனை ஓட்டி வந்த டிரைவர் திடீரென்று உயிரிழந்தார்.
வேன் டிரைவர் திடீர் சாவு
Published on

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 32). வேன் டிரைவர். நேற்று இவர் அருப்புக்கோட்டையில் இருந்து வத்தலக்குண்டு அருகே உள்ள பழைய வத்தலக்குண்டுவுக்கு வாழை இலை ஏற்ற சரக்கு வேனை ஓட்டி வந்தார். அப்போது வத்தலக்குண்டை அடுத்த வெங்கடாதிஸ்ரிகோட்டை என்னுமிடத்தில் மணிகண்டனுக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனே வேனை அவர் சாலையோரத்தில் நிறுத்தினார். சிறிது நேரத்தில் வேனில் மயங்கி விழுந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், மணிகண்டன் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்து வத்தலக்குண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com