தாயை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது

தாயை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்
தாயை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது
Published on

ஏர்வாடி:

ஏர்வாடி அருகே சேசையாபுரம் நடு தெருவைச் சேர்ந்தவர் கடற்கரையாண்டி. இவருடைய மனைவி சுமதி (வயது 45), ஏர்வாடியில் உள்ள கடையில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் ராஜேஷ்குமார் (24) திருமணமாகி ஏர்வாடியில் வசித்து வருகிறார்.

சம்பவத்தன்று சுமதி தனது 2-வது மகன் ரஞ்சித்குமாரிடம், நீ சேர கூடாத பசங்களுடன் சேர்ந்து தவறான பாதைக்கு செல்வதாக, உனது அண்ணன் ராஜேஷ்குமார் கூறியதாக கூறினார். உடனே ரஞ்சித்குமார் செல்போனில் அண்ணன் ராஜேஷ்குமாரை தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜேஷ்குமார், தாயார் சுமதியின் வீட்டுக்கு சென்று தகராறு செய்து அவரை அரிவாளால் வெட்டினார். இதில் காயமடைந்த சுமதியை களக்காடு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்த புகாரின்பேரில், ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ்குமாரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com