கள்ளக்காதலி வீட்டில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


கள்ளக்காதலி வீட்டில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x

கள்ளக்காதலி வீட்டில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருவண்ணாமலை,

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஜே.ஜே.ரவி நகர் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மகன் தமிழரசன் (வயது 22). இவர், காஞ்சீபுரத்தை சேர்ந்த கணவரை பிரிந்து வாழும் லேப் டெக்னீசியனான அசினா என்பவருடன் பழகியுள்ளார். இந்த நிலையில் அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அசினா திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறை அடுத்த மாமண்டூர் சந்தைமேடு மணவாள நகர் பகுதியில் தனியாக வசித்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு அசினா வீட்டிற்கு தமிழரசன் வந்துள்ளார். பின்னர் அசினா வழக்கம் போல வேலைக்கு சென்றுவிட்டார். நேற்று காலையில் அசினா வீட்டிற்கு வந்த போது தமிழரசன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே சம்பவம் குறித்து போலீசார் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்தது சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தூசி போலீசார் வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வாலிபர் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

கள்ளக்காதலி வீட்டில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story