பாகிஸ்தானில் கோர விபத்து: பள்ளத்தில் டிரக் கவிழ்ந்து 13 யாத்ரீகர்கள் பலி

பலுசிஸ்தானின் குஜ்தார் மாவட்டத்தில் உள்ள ஷா நூரானி ஆலயத்திற்கு சென்று கொண்டிருந்த போது, விபத்து ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் கோர விபத்து: பள்ளத்தில் டிரக் கவிழ்ந்து 13 யாத்ரீகர்கள் பலி
Published on

கராச்சி:

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம், ஹப் மாவட்டத்தில் யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற டிரக் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்ததாகவும், சுமார் 30 பேர் காயமடைந்துள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை உயரலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது.

பலுசிஸ்தானின் குஜ்தார் மாவட்டத்தில் உள்ள ஷா நூரானி ஆலயத்திற்கு சென்று கொண்டிருந்த போது, நேற்று இரவு விபத்து ஏற்பட்டுள்ளது. கராச்சியில் இருந்து 200 கிமீ தொலைவில் உள்ள தொலைதூர மலைப்பகுதியில் ஷா நூரானி ஆலயம் அமைந்துள்ளது.

விபத்தில் சிக்கிய யாத்ரீகர்கள் சிந்து மாகாணத்தில் உள்ள தட்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com