பாக். தலைமை போலீஸ் நிலையத்தில் புகுந்து பயங்கராவாதிகள் தாக்குதல் - 2 பேர் பலி


பாக். தலைமை போலீஸ் நிலையத்தில் புகுந்து பயங்கராவாதிகள் தாக்குதல் - 2 பேர் பலி
x

பாகிஸ்தானில் தலைமை போலீஸ் நிலையத்தில் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 பேர் உயிரிழந்தனர்.

லாகூர்,

பாகிஸ்தானின் கராச்சி தலைமை போலீஸ் நிலையத்திற்குள் நேற்று இரவு பயங்கரவாதிகள் புகுந்தனர். பயங்கர ஆயுதங்களுடன் 8 பயங்கரவாதிகள் கராச்சியின் ஷரி பைசர் நகரில் உள்ள தலைமை போலீஸ் நிலையத்திற்குள் புகுந்தனர்.

கையெறி குண்டு, துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் போலீஸ் நிலையத்தை கைப்பற்ற முயற்சித்தனர். போலீஸ் நிலையத்தில் தற்கொலைப்படை தாக்குதலும் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலில் 2 போலீசார் உயிரிழந்தனர். மேலும், 11 பேர் படுகாயமடைந்தனர். போலீசார் நடத்திய பதிலடி தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பல மணிநேர சண்டைக்கு பின் போலீஸ் அலுவலகத்தை போலீசார் மீட்டனர்.

1 More update

Next Story