பிராந்திய அமைதிக்கு காஷ்மீர் விவகாரத்தை தீர்க்க வேண்டும் பாகிஸ்தான் சொல்கிறது

பிராந்திய அமைதிக்கு காஷ்மீர் விவகாரத்தை தீர்க்க வேண்டும் என பாகிஸ்தான் கூறி உள்ளது. #Kashmirissue
பிராந்திய அமைதிக்கு காஷ்மீர் விவகாரத்தை தீர்க்க வேண்டும் பாகிஸ்தான் சொல்கிறது
Published on

இஸ்லாமாபாத்,

காஷ்மீர் பிரச்சனையை தீர்க்காமல் பிராந்தியத்தில் அமைதி மற்றும் வளர்ச்சி என்ற கனவானது நிறைவேறாததாகவே இருக்கும் என கூறி உள்ள பாகிஸ்தான், சுயநிர்ணய உரிமைக்கு போராடும் காஷ்மீர் பள்ளத்தாக்கு மக்களுக்கு எங்களுடைய ஆதரவு எப்போதுமே இருக்கும் என கூறிஉள்ளது.

எல்லையில் பயங்கரவாதிகளை ஊடுருவ செய்தும், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியும் பாகிஸ்தான் அடாவடி செயலில் ஈடுபட்டு வருகிறது. காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் பிரிவினைவாதிகளுக்கு பணம் கொடுத்தும் அமைதியை சீர்குலைக்கிறது.

காஷ்மீரில் பிரச்சனையை தூண்டிவிட்டு சர்வதேச அரங்கில் முதலில் புகாராக தெரிவித்து குட்டு வாங்குவது பாகிஸ்தானுக்கு வழக்கமான ஒன்றாகும். இப்போது காஷ்மீர் விவகாரத்தை அமைதியான முறையில் தீர்க்க வேண்டும் என பாகிஸ்தான் கூறி உள்ளது.

பிப்ரவரி 5-ம் தேதியை காஷ்மீர் ஒற்றுமைக்கான தினமாக அனுசரித்து வரும் நிலையில் பாகிஸ்தான் பிரதமர் மற்றும் ஜனாதிபதியிடம் இருந்து அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. அதில் காஷ்மீர் விவகாரத்தை அமைதியான முறையில் தீர்க்க வேண்டும் என குறிப்பிடப்பட்டு உள்ளது. ஐநா தீர்மானத்தின்படி சுயநிர்ணய உரிமைக்காக போராடி வரும் காஷ்மீர் மக்களுக்கு அரசியல், இராஜதந்திர ரீதியில் ஆதரவு தெரிவிப்போம், பாகிஸ்தான் அதிபர் மமூன் ஹூசைன் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் அப்பாசியும் காஷ்மீர் மக்களுக்கு ஆதரவு தெரிவிப்பதாக குறிப்பிட்டு உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com