சிபிஇசி கட்டமைப்பில் இந்தியா தாக்குதல் நடத்த திட்டமிட்டு உள்ளது என பாகிஸ்தான் அச்சம்

சிபிஇசி கட்டமைப்பில் இந்தியா தாக்குதல் நடத்த திட்டமிட்டு உள்ளது என பாகிஸ்தான் அஞ்சுகிறது என தகவல் வெளியாகி உள்ளது.
இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் டான் பத்திரிக்கை “பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக முன்னெடுக்கப்படும் சீனா - பாகிஸ்தான் பொருளாதார மண்டல (சிபிஇசி) கட்டமைப்பில் இந்தியா தாக்குதல் நடத்தலாம் என பாகிஸ்தான் சந்தேகிக்கிறது,” என குறிப்பிடப்பட்டு உள்ளது.
பாகிஸ்தானில் சீனா-பாகிஸ்தான் பொருளாதார மண்டலத்தை சீனா அமைத்து வருகிறது. இது பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் மாகாணத்தையும் சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தையும் இணைக்கிறது. இந்த பொருளாதார மண்டலமானது, இந்தியாவிடமிருந்து பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் பகுதி வழியாக செல்கிறது. எனவே இந்தத் திட்டத்துக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனால் இந்தியாவின் எதிர்ப்பை கருத்தில் கொள்ளாமல் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் இந்தியா மேற்கொள்ளும் பணியை காரணமாக காட்டப்படுகிறது.
இந்நிலையில் பல பில்லியன் டாலர் மதிப்பிலான சீனா - பாகிஸ்தான் பொருளாதார மண்டல திட்டத்தை நாசப்படுத்த இந்தியா திட்டமிட்டு உள்ளது என பாகிஸ்தான் உள்துறை அமைச்சக தகவல்கள் தெரிவிப்பதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.
கில்கித்-பல்திஸ்தான் உள்துறை அமைச்சகத்திற்கு பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் எழுதி உள்ள கடிதத்தில் திட்டத்தை மையப்படுத்தி பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. சாலையில் அமையப்பெற்று உள்ள பாலங்கள் மற்றும் முக்கிய இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளது. திட்டத்தை நாசப்படுத்தும் வகையிலான தாக்குதலை முறியடிக்க தேவையான பாதுகாப்பை வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த தாக்குதலை முன்னெடுக்க தேவையான பயிற்சியை பெறுவதற்கு இந்தியா 400 இஸ்லாமிய இளைஞர்களை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி உள்ளது எனவும் பாகிஸ்தான் உள்துறை அமைச்சக அதிகாரி கூறிஉள்ளார் என செய்தியில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story






