உலக செய்திகள்

காசா சாலையில் வெடி விபத்து பாலஸ்தீன பிரதமர் உயிர் தப்பினார் + "||" + Explosion in Gaza road Palestinian Prime Minister survived

காசா சாலையில் வெடி விபத்து பாலஸ்தீன பிரதமர் உயிர் தப்பினார்

காசா சாலையில் வெடி விபத்து
பாலஸ்தீன பிரதமர் உயிர் தப்பினார்
பாலஸ்தீன பிரதமர் காசா சாலையில் பயணம் செய்தபோது பலத்த வெடிச்சத்தம் கேட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
காசா, 

பாலஸ்தீனத்தில் ரமி ஹம்தல்லா பிரதமராக உள்ளார். அவர் நேற்று காசாவில் கழிவுப்பொருட்கள் ஆலை ஒன்றை தொடங்கி வைப்பதற்காக சென்று கொண்டு இருந்தார். அவர் காசா சாலையில் பயணம் செய்தார். அவருடன் வாகன அணிவகுப்பும் உடன் சென்றது.

குறிப்பிட்ட ஒரு இடத்தை ரமி ஹம்தல்லாவின் வாகனம் கடந்தபோது பலத்த வெடிச்சத்தம் கேட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது தொடர்பான காட்சிகள் டெலிவிஷனில் உடனடியாக வெளியாகின. அதில் பிரதமர் ரமி ஹம்தல்லா காயமின்றி உயிர் தப்பியது தெரிந்தது. வெடிவிபத்தின் பின்னணி என்ன என்பது உடனடியாக தெரியவரவில்லை.

பிரதமர் ரமி ஹம்தல்லா திட்டமிட்டபடி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.