ரஷியாவில் படகுகள் மோதலில் 10 பேர் சாவு


ரஷியாவில் படகுகள் மோதலில் 10 பேர் சாவு
x
தினத்தந்தி 12 Jun 2018 10:45 PM GMT (Updated: 12 Jun 2018 7:09 PM GMT)

ரஷியாவில் உலக கால்பந்து போட்டி நடக்க உள்ள நகரில் படகுகள் மோதலில் 10 பேர் பலியானார்கள்.

மாஸ்கோ,

ரஷியாவில் உலக கால்பந்து போட்டி நடைபெறுகிற நகரங்களில் ஒன்று வோல்காகிரேட். இந்த நகரத்தில்தான் இங்கிலாந்து, துனிசியா, நைஜீரியா, ஐஸ்லாந்து, சவுதி அரேபியா, எகிப்து, ஜப்பான், போலந்து நாடுகள் பங்கேற்கிற முதல் சுற்று போட்டிகள் நடக்க உள்ளன.

அங்கு உள்ள வோல்கா ஆற்றில் நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி இரவு 10 மணிக்கு ஒரு உல்லாச படகு, மற்றொரு இழுவை படகுடன் பயங்கரமாக மோதி விபத்து நேரிட்டது.

உல்லாச படகில் மொத்தம் 16 பேர் பயணம் செய்தனர்.

விபத்து குறித்த தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். எனினும் 5 பேர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டனர். ஒருவர் என்ன ஆனார் என தெரியவில்லை. 10 பேரை பிணங்களாகத்தான் மீட்க முடிந்தது.

மீட்கப்பட்டவர்களில் 3 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இறந்தவர்கள் அனைவரும் ரஷிய நாட்டினர் ஆவர்.

இந்த விபத்து குறித்து அங்கு தீவிர விசாரணை நடத்தப்படுகிறது.


Next Story