புழுதி புயலால் நிறம் மாறிய செவ்வாய் கிரகம்


புழுதி புயலால்  நிறம் மாறிய செவ்வாய் கிரகம்
x
தினத்தந்தி 22 Jun 2018 1:59 PM IST (Updated: 22 Jun 2018 1:59 PM IST)
t-max-icont-min-icon

செவ்வாய் கிரகம் புழுதி புயல் காரணமாக பல இடங்கள் நிறம் மாறி வருவதாக தெரியவந்துள்ளது.


செவ்வாய் கிரகத்தில் தூசு புயல் வீசவுள்ளதாக நாசா தகவல் வெளியிட்டு உள்ளது. வட அமெரிக்க கண்டத்தை விடவும் விசாலமான பரப்பில் இப் புயல் வீசவுள்ளது. அதாவது சுமார் 18 மில்லியன் சதுர கிலோ மீட்டர்கள் வரை பரவக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. தற்போது புயல் வீசுவதற்கான அறிகுறிகள் தோன்றுவதற்கு ஆரம்பித்துள்ளது. எதிர்வரும் வெள்ளிக்கிழமை அங்கு புயல் வீசும் என நாசா கூறியுள்ளது.

செவ்வாய் கிரகத்தில் புழுதி புயல் காரணமாக பல இடங்கள் நிறம் மாறி வருவதாக தெரியவந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக செவ்வாய் கிரகத்தில் தாக்கிவரும் புழுதி புயலை கியூரியாசிட்டி ரோவர் விண்கலம் படம் பிடித்துள்ளது.

அந்த புகைப்படங்களை நாசா வெளியிட்டிருக்கிறது. புழுதி புயல் காரணமாக பல இடங்கள் மோசமான பாதிப்பை சந்தித்துள்ளதாகவும் நாசா தெரிவித்துள்ளது.

சாதாரண நாட்களில் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும், புழுதி புயலின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் ஒப்பிட்டு நாசா பாதிப்புகளை விளக்கியுள்ளது.

இதனிடையே, புழுதி புயலால் ரோவர் விண்கலத்தில் பாதிப்பு ஏதேனும் ஏற்பட்டிருக்கிறதா என்பதையும் நாசா கண்காணித்து வருகிறது.

1 More update

Next Story