எந்த நாட்டுடனும் பாகிஸ்தான் போரில் ஈடுபடாது - இம்ரான்கான்


எந்த நாட்டுடனும் பாகிஸ்தான் போரில் ஈடுபடாது - இம்ரான்கான்
x
தினத்தந்தி 7 Sep 2018 1:54 PM GMT (Updated: 7 Sep 2018 1:54 PM GMT)

எந்த நாட்டுடனும் பாகிஸ்தான் போரில் ஈடுபடாது என்று அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் கூறியுள்ளார்.

ராவல்பிண்டி, 


பாகிஸ்தான்ராணுவ தலைமையகத்தில் நடந்த ராணுவ மற்றும் தியாகிகள் தின விழாவில் பேசிய இம்ரான் கான், என்னுடைய அரசாங்கம் அனைத்து துறைகளிலும் திறனையும், வெளிப்படைத்தன்மையையும் கொண்டுவரும் என்று கூறியுள்ளார். போர் என்பது கூடாது என்பதே என்னுடைய வலியுறுத்தலாகும். எதிர்காலத்தில் பாகிஸ்தான் எந்த நாட்டுடனும் போரில் ஈடுபடாது. பாகிஸ்தானின் வெளிநாட்டு கொள்கை நாட்டு மக்களின் நலன்களை அடிப்படையாக கொண்டு அமையும். பயங்கரவாதத்துக்கு எதிரான போரால் பெரும் அழிவும், துயரமும்தான் ஏற்படும். 

நாட்டில் பயங்கரவாதத்திற்கு எதிரான போர்க்குணம் காரணமாக 70,000-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் காயமடைந்துள்ளனர். பொருளாதார இழப்பும், மனித இழப்புக்களுக்கு கூடுதலாக உள்ளது. அதனால்தான் பயங்கரவாதம் கூடாது என்று கூறி வருகிறேன். என்றபோதிலும் பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் நமது ராணுவம் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பாகிஸ்தான் ராணுவத்தை போல வேறு யாரும் பயங்கரவாதத்துக்கு எதிராக இதுபோல் சண்டையிட்டதில்லை. 

பயங்கரவாதம் பற்றிய சிந்தனை முடிவுக்கு வரும் வரை அதற்கு எதிரான போரில் பாகிஸ்தான் ஈடுபடும் என்று குறிப்பிட்டுள்ளார் இம்ரான் கான். 


Next Story