சீனாவில் மக்கள் கூட்டத்திற்குள் கார் புகுந்தது: 9 பேர் பலி, 40 க்கும் மேற்பட்டோர் காயம்

சீனாவில் மக்கள் கூட்டத்திற்குள் கார் புகுந்ததில் 9 பேர் பலியாகினர். 40 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
சீனாவில் மக்கள் கூட்டத்திற்குள் கார் புகுந்தது: 9 பேர் பலி, 40 க்கும் மேற்பட்டோர் காயம்
Published on

பெய்ஜிங்,

சீன நாட்டின் ஹூனான் மாகாணத்தில் மக்கள் அதிகம் கூடியிருந்த பகுதியில் நேற்று ஒரு கார் வேகமாக வந்தது. அந்த கார் மக்கள் கூட்டத்தின் மீது மோதியது. இதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும், 46 பேர் படுகாயம் அடைந்தனர். அந்த பகுதியில் இருந்த போலீசார் அந்த நபரை சுற்றி வளைத்துப் பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர் யாங் ஜான்யுன் (54) என்றும், பல்வேறு குற்ற வழக்குகளில் பலமுறை சிறை சென்ற குற்றவாளி என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து, அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சீனாவில் பொருளாதார ஏற்றத்தாழ்வு அந்நாட்டில் அதிகரித்துள்ள நிலையில், கடந்த சில ஆண்டுகளில் குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்றன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com