நைஜீரியாவில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 5 பேர் பலி


நைஜீரியாவில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 5 பேர் பலி
x
தினத்தந்தி 5 Jan 2019 4:30 AM IST (Updated: 5 Jan 2019 12:32 AM IST)
t-max-icont-min-icon

நைஜீரியாவில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 5 பேர் பலியாயினர்.

லாகோஸ்,

நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள போர்னோ மாகாணத்தில் டமாஸ்க் என்கிற நகரில் போகோஹரம் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் ராணுவவீரர்கள் ஈடுபட்டிருந்தனர்.

ராணுவவீரர்களுக்கு உதவுவதற்காக நைஜீரிய விமானப்படைக்கு சொந்தமான ‘எம்.ஐ-35எம்’ ரக ஹெலிகாப்டர் அங்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஹெலிகாப்டரில் விமானி உள்பட 5 பேர் இருந்தனர்.

அந்த ஹெலிகாப்டர் வானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென தரையில் விழுந்து நொறுங்கியது. இதில் ஹெலிகாப்டரில் இருந்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர்.
1 More update

Next Story