உலக செய்திகள்

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு; 4 பேர் படுகாயம் + "||" + Blast in Pakistan 4 people were injured

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு; 4 பேர் படுகாயம்

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு; 4 பேர் படுகாயம்
பாகிஸ்தானில் நடந்த குண்டு வெடிப்பில் சிக்கி 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் நாட்டின் பெஷாவர் நகரில் சத்தார் பகுதியில் கலாபாரி என்னும் பிரபல மார்க்கெட் உள்ளது. இங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு காரில் நேற்று காலை பலத்த சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் தூக்கி வீசப்பட்ட ஒரு பெண் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். 12 கடைகள் சேதம் அடைந்தன.

சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அப்பகுதியை முற்றுகையிட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், காரில் வைக்கப்பட்டிருந்தது மிகவும் சக்தி வாய்ந்த குண்டு என்பதும் அது முன்கூட்டியே வெடித்ததும் தெரியவந்தது.

மார்கெட் திறக்கப்படுவதற்கு முன்பாகவே குண்டு வெடித்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஜெய்ஷ் இ முகமது இயக்கத் தலைமையகத்தை கைப்பற்றியதாக கூறி விட்டு பின்வாங்கிய பாகிஸ்தான்
ஜெய்ஷ் இ முகமது இயக்கத் தலைமையகத்தை கைப்பற்றிவிட்டதாக அறிவித்த பாகிஸ்தான், அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் அந்த தகவலை அரசு இணையதளத்தில் இருந்து நீக்கியுள்ளது.
2. பாகிஸ்தானை கண்டித்து இந்திய வம்சாவளியினர் அமெரிக்காவில் போராட்டம்
பாகிஸ்தானை கண்டித்து இந்திய வம்சாவளியினர் அமெரிக்காவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3. இந்தியா -பாகிஸ்தான் இடையேயான தற்போதைய உறவு மிக மிக மோசமாக உள்ளது : டொனால்டு டிரம்ப்
இந்தியா -பாகிஸ்தான் இடையேயான தற்போதைய உறவு மிக மிக மோசமாக உள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.
4. பாகிஸ்தானில் கனமழை, வெள்ளத்துக்கு 28 பேர் பலி
பாகிஸ்தானில் கனமழை, வெள்ளத்துக்கு 28 பேர் பலியாயினர்.
5. பாகிஸ்தானின் தடை பட்டியலில் 69 பயங்கரவாத அமைப்புகள் - அரசு ஆவணங்களில் தகவல்
பாகிஸ்தானின் தடை பட்டியலில் 69 பயங்கரவாத அமைப்புகள் உள்ளதாக அந்நாட்டு அரசு ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.