சூடானில் லாரி மீது பஸ் மோதி 14 பேர் சாவு


சூடானில் லாரி மீது பஸ் மோதி 14 பேர் சாவு
x
தினத்தந்தி 15 Jan 2019 4:15 AM IST (Updated: 15 Jan 2019 1:55 AM IST)
t-max-icont-min-icon

சூடான் நாட்டின் தலைநகர் கார்டூமில் இருந்து பயணிகள் பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. இதில் 50–க்கும் மேற்பட்டோர் இருந்தனர்.

கார்டூம், 

தார்பூர்–கோர்டோபான் மாகாணங்களின் எல்லையில் உள்ள கடாடா நகரின் சாலையில் பஸ் அதிவேகத்தில் சென்றுகொண்டிருந்து.

அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக, பழுதாகி சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது பஸ் பயங்கரமாக மோதியது.

இதில் பஸ் அப்பளம் போல் நொறுங்கியது. பஸ்சில் பயணம் செய்த 14 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிர் இழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.

அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

1 More update

Related Tags :
Next Story