உலக செய்திகள்

பாகிஸ்தானில் சுப்ரீம் கோர்ட்டு புதிய தலைமை நீதிபதி பதவி ஏற்பு + "||" + In Pakistan Supreme Court Chief Justice sworn function

பாகிஸ்தானில் சுப்ரீம் கோர்ட்டு புதிய தலைமை நீதிபதி பதவி ஏற்பு

பாகிஸ்தானில் சுப்ரீம் கோர்ட்டு புதிய தலைமை நீதிபதி பதவி ஏற்பு
பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்த மியான் சாகிப் நிசார் ஓய்வு பெற்றார். இதையடுத்து புதிய தலைமை நீதிபதியாக ஆசிப் சயீத்கான் கோசா நியமிக்கப்பட்டார்.

இஸ்லாமாபாத், 

ஆசிப் சயீத்கான் கோசா  பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டின் 26–வது தலைமை நீதிபதி ஆவார். புதிய தலைமை நீதிபதி பதவி ஏற்பு விழா, இஸ்லாமாபாத்தில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடந்தது. 

புதிய தலைமை நீதிபதி ஆசிப் சயீத்கான் கோசாவுக்கு ஜனாதிபதி ஆரிப் ஆல்வி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த விழாவில் பிரதமர் இம்ரான்கான், ராணுவ தளபதி ஜெனரல் கமர் ஜாவத் பஜ்வா, விமானப்படை தளபதி ஆசிம் ஜாகீர், கடற்படை தளபதி ஜாபர் மக்மூத் அப்பாசி, நாடாளுமன்ற செனட் சபை தலைவர் சாதிக் சஞ்ச்ரானி, நாடாளுமன்ற மக்கள் சபை சபாநாயகர் ஆசாத் கைசர், மூத்த மந்திரிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்திய சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உள்ளிட்ட வெளிநாட்டு பிரமுகர்களும் விழாவில் பங்கேற்றனர்.

புதிய தலைமை நீதிபதி ஆசிப் சயீத்கான் கோசாவின் பதவிக்காலம் 337 நாட்கள் ஆகும். இவர் அடுத்த ஆண்டு டிசம்பர் 21–ந் தேதி ஓய்வு பெறுவார்.

பதவி ஏற்ற பின்னர் பொறுப்பு ஏற்பதற்காக சுப்ரீம் கோர்ட்டுக்கு வந்த போது தலைமை நீதிபதி ஆசிப் சயீத்கான் கோசாவுக்கு அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.


தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தானுடன் விளையாடுவது குறித்து மத்திய அரசு எடுக்கும் முடிவை மதிப்போம்: விராட் கோலி
பாகிஸ்தானுடன் விளையாடுவது குறித்து மத்திய அரசு எடுக்கும் முடிவை மதிப்போம் என்று விராட் கோலி தெரிவித்தார்.
2. பாகிஸ்தான் நோக்கி பாயும் நதிநீரை தடுத்து நிறுத்தினால் கவலைப்பட மாட்டோம் - பாகிஸ்தான்
கிழக்கில் இருந்து பாகிஸ்தான் நோக்கிப் பாயும் பியாஸ், ராவி, சட்லெஜ் நதி நீரை இந்தியா தடுத்தாலும், திசை மாற்றினாலும் நாங்கள் கவலைப்படமாட்டோம் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
3. உலக கோப்பை போட்டியிலிருந்து பாகிஸ்தானை வெளியேற்றுங்கள்; வலுக்கும் கோரிக்கை
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து பாகிஸ்தானை வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
4. புல்வாமா தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது அமைப்புதான் காரணம்; ஆனால் பாகிஸ்தான் உத்தரவிடவில்லை - பர்வேஸ் முஷாரப்
காஷ்மீரில் 40 பேர் உயிரிழப்புக்கு காரணமான தாக்குதலை நடத்தியது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்புதான் என பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் கூறியுள்ளார்.
5. உலக கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தை இந்திய அணி புறக்கணிக்குமா? - மத்திய சட்ட மந்திரி பதில்
உலக கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தை இந்திய அணி புறக்கணிக்குமா? என்ற கேள்விக்கு மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் பதில் அளித்தார்.