உலக செய்திகள்

ஜப்பானில் பயங்கரம்: மக்கள் கூட்டத்துக்குள் புகுந்த கார் - 2 வயது குழந்தையுடன் இளம் பெண் பலி + "||" + Terror in Japan: The crowd of people who entered the car - Young girl kills 2 year old baby

ஜப்பானில் பயங்கரம்: மக்கள் கூட்டத்துக்குள் புகுந்த கார் - 2 வயது குழந்தையுடன் இளம் பெண் பலி

ஜப்பானில் பயங்கரம்: மக்கள் கூட்டத்துக்குள் புகுந்த கார் - 2 வயது குழந்தையுடன் இளம் பெண் பலி
ஜப்பானில் மக்கள் கூட்டத்துக்குள் கார் புகுந்த விபத்தில் 2 வயது குழந்தையுடன் இளம் பெண் ஒருவர் பலியானார்.
டோக்கியோ,

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள இகேபுகுரோ மாவட்டத்தில் சுரங்கப்பாதை ரெயில் நிலையம் ஒன்று உள்ளது. இந்த ரெயில் நிலையத்துக்கு தினந்தோறும் சுமார் 50 ஆயிரம் பேர் வந்து செல்வதால், ரெயில் நிலையம் அமைந்துள்ள சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும்.


இந்த நிலையில், உள்ளூர் நேரப்படி நேற்று மதியம் 12.30 மணிக்கு இந்த சாலையில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அப்போது அங்கு அதிவேகத்தில் வந்த கார் ஒன்று திடீரென மக்கள் கூட்டத்துக்குள் புகுந்தது.

இதில் பலர் தூக்கி வீசப்பட்டனர். சிலர் கார் சக்கரத்தில் நசுங்கினர். அதன் பின்னரும் தறிக்கெட்டு ஓடிய அந்த கார் ஒரு குப்பை லாரியின் மீது மோதி நின்றது. இந்த கோர விபத்தில் 20 வயதான ஒரு பெண்ணும், அவரது 2 வயது பெண் குழந்தையும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் 8 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஜப்பானில் அடுத்தடுத்து 3 முறை பயங்கர நிலநடுக்கம்: பீதியில் உறைந்த மக்கள்
ஜப்பானில் அடுத்தடுத்து 3 முறை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் மக்கள் பீதியில் உறைந்தனர்.
2. ஜப்பானில் பயங்கரம்: மழலையர் பள்ளி மாணவர்கள் கூட்டத்துக்குள் புகுந்த கார் - 2 குழந்தைகள் பரிதாப சாவு
ஜப்பானில் மழலையர் பள்ளி மாணவர்கள் கூட்டத்துக்குள் கார் புகுந்த சம்பவத்தில் 2 குழந்தைகள் பரிதாப உயிரிழந்தனர்.
3. தடையை மீறி சிவப்பு சுழல் விளக்கை காரில் பொருத்திச்சென்ற 6 வாலிபர்கள் கைது
தடையை மீறி சிவப்பு சுழல் விளக்கை காரில் பொருத்திச்சென்ற 6 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
4. பின்லேடன் படத்துடன் கேரளாவில் சுற்றிய கார்
பின்லேடன் படத்துடன் கேரளாவில் கார் ஒன்று சுற்றி திரிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
5. பெருமாநல்லூர் அருகே காரில் பெண் பிணத்தை வைத்து விட்டு சென்ற கணவரை பிடிக்க போலீசார் தீவிரம்
பெருமாநல்லூர் அருகே காருக்குள் பெண் பிணத்தை வைத்து விட்டு குழந்தையுடன் பெங்களூரு சென்ற கணவரை பிடித்து விசாரணை நடத்த தனிப்படை போலீசார் இன்று (வியாழக்கிழமை) பெங்களூருக்கு செல்கிறார்கள்.