உலக செய்திகள்

மோடிக்கு பாகிஸ்தான் பத்திரிகைகள் புகழாரம் + "||" + Pakistani newspapers praise for Modi

மோடிக்கு பாகிஸ்தான் பத்திரிகைகள் புகழாரம்

மோடிக்கு பாகிஸ்தான் பத்திரிகைகள் புகழாரம்
நாடாளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்ற மோடிக்கு பாகிஸ்தான் பத்திரிகைகள் புகழாரம் சூட்டின.

இஸ்லாமாபாத், 

இந்திய நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றிப்பெற்றது.

ஓட்டு எண்ணிக்கையின் விவரங்களை விரிவாக வெளியிட்ட பாகிஸ்தான் ஊடகங்கள் மோடி அரசின் இந்த வெற்றியை தலைப்பு செய்திகளாக்கின.

இந்தநிலையில், நாடாளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று தொடர்ந்து 2–வது முறையாக பிரதமராகி இருக்கும் மோடிக்கு பாகிஸ்தான் நாளிதழ்கள் புகழாரம் சூட்டின.

அந்நாட்டின் பழமைவாய்ந்த பத்திரிகையான டான் நாளிதழ் தனது முதல் பக்கத்தில், ‘‘பொதுத்தேர்தலில் மோடி மகத்தான வெற்றிப்பெற்றுள்ளார். இதன் மூலம் அவர் தேசத்தின் பாதுகாவலனாக பார்க்கப்படுகிறார்’’ என செய்தி வெளியிட்டது.

இதே போல் அந்நாட்டின் முக்கிய பத்திரிகைகள் அனைத்தும் மோடியை புகழ்ந்து செய்திகள் வெளியிட்டன. அத்துடன் அந்நாட்டின் செய்தி தொலைக்காட்சி சேனல்களில், மோடி மீண்டும் பிரதமராகி இருப்பது இந்திய–பாகிஸ்தான் உறவில் எந்த மாதிரியான தாக்கங்களை ஏற்படுத்தும் என்பது குறித்து சிறப்பு விவாத நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.


தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தானால் இந்திய அணியை வெல்ல இயலாது - ஷேவாக் கணிப்பு
பாகிஸ்தானால் இந்திய அணியை வெல்ல இயலாது என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஷேவாக் தெரிவித்துள்ளார்.
2. போலி வங்கி கணக்குகள் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் சர்தாரி கைது
போலி வங்கி கணக்குகள் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் சர்தாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
3. பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: 3 ராணுவ அதிகாரிகள் பலி
பாகிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் 3 ராணுவ அதிகாரிகள் பலியாகினர்.
4. "பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்போம்" - பிரதமர் மோடிக்கு இம்ரான்கான் அழைப்பு
காஷ்மீர் உள்ளிட்ட இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் என, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வலியுறுத்தி உள்ளார்.
5. பாகிஸ்தானில் 62 தண்ணீர் பம்பு அமைத்து கொடுத்த துபாய் இந்தியர்
துபாய் இந்தியர் ஒருவர் பாகிஸ்தானில் 62 தண்ணீர் பம்புகள் அமைத்து கொடுத்துள்ளார்.